சனிகா பனிகா

ஏன்டியம்மா இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெத்தவளே!
@@@@
என்னங்க பாட்டி?
@@@
எங்க புல்லாங்குழல், சின்னக் கண்ணாடி?
@@@@
என்னங்க பாட்டி சொல்லுறீங்க? புல்லாங்குழல் இசை நிகழ்ச்சில தான் பயன்படுத்தறாங்க. சின்னக் கண்ணாடி என்ன எங்க வீட்டில் பெரிய கண்ணாடியே இருக்குது? எதுக்கு இதைக் கேட்டீங்க?
@@@@@
அப்படியா? சொல்லறே. உன்னோட இரட்டைப் பொண்ணுங்க பேரைச் சொல்லுடி.
@@@@@
சனிகா, பனிகா.
@@@@@@@
சனி. பனி. சனி ராசி இல்லாத நாள்னு சொல்லுவாங்க. பனில நனைஞ்சா உடம்புக்கு முடியாம போகும். ஏழரை நாட்டு சனி பிடிச்சா குடும்பத்தை ஆட்டி வச்சிடும். எதுக்குடி பெத்த பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பேருங்கள வச்சீங்க? சரி. இந்தப் பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@
தெரியாதுங்க பாட்டி. இந்திப் பேருங்கள பிள்ளைகளுக்கு வைக்கிறது தானே தமிழர் நாகரிகம். தமிழ்ப் பேரை வைக்கிறவங்கவள தமிழர்கள் யாரும் மதிக்கிறதில்லையே.

#@@####
தமிழர்கள் தாய் மொழிப் பற்றை அடியோட மறந்துட்டாங்கடி சுவ்வேதா!

எழுதியவர் : மலர் (6-Nov-22, 2:58 pm)
பார்வை : 49

மேலே