என்றென்றும் ஆனந்தமே - புதுக்கவிதை

புதிதாய்ப் பிறந்த பச்சிளம்
குழந்தையைக் காண்பது
ஆனந்தமே;

கனவுகளுடன் தூங்கும்
குழந்தையின் முகத்தைக் காண்பது
ஆனந்தமே;

தவழும் குழந்தை கைகள் முழங்கால்களை
ஊன்றி, தள்ளாடி நகர்வதைக் காண்பது
ஆனந்தமே;

நடைபயிலும் குழந்தையின்
கைபிடித்து நடப்பதும், காண்பதும்
ஆனந்தமே;

குழந்தையின் மழலை கேட்பது
ஆனந்தமே; குழந்தை கேட்கும் கேள்விகள்
அர்த்தமுள்ளதும் ஆனந்தமானதுமே;

சின்னஞ்சிறு குழந்தை, தோழர்களுடன்
சுற்றித் திரிந்து விளையாடுவதைக் காண்பது
என்றென்றும் ஆனந்தமே!

பள்ளிக்குச் சீருடையில்,
கையசைத்துச் செல்வதைக் காண்பது
ஆனந்தமே;

பள்ளியில் கற்று வந்த சொற்களை,
பாடலை, ஆடலை கேட்பதும் காண்பதும்
ஆனந்தமே;

ஒவ்வொரு நாளும் அவர்கள்
உடலில், அறிவில் வளர்வதைக்
காண்பது என்றென்றும் ஆனந்தமே;
பேரானந்தமே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-22, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

மேலே