காதல் கும்மாளம்
காதலர் கும்மாளம்
நேரிசை வெண்பா
சீனப்பி சாசுதினம் சீண்ட வடக்கிலே
கோனைப்பாக் கால்தான் கொடுந்தொல்லை -- வானளவு
வாய்கிழிய பேசுதமி ழர்தாம் வழிமறந்தார்
தாய்மொழிநாட் டுப்பற்றுந் தான்
கும்மாளம் காதலாம் கூத்தடித்து நாளையும்
சும்மாக் கழிப்பராம் சோம்பேறி --- வம்பெனக்
காதல் கிறுக்கும் கயவர் நினைத்திடார்
சாதல் பகையாலே சாற்று
...