சின்னப் பூவே மெல்லப் பேசு
சின்னப் பூவே மெல்லப் பேசு!!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சின்னப் பூவே
என்றன் உயிரே /
கன்னித் தமிழில் மெல்லவே பேசு /
உள்ளம் எல்லாம்
கொள்ளை கொண்டாய் /
கள்ளம் இன்றி சிரித்தே வென்றாய் /
என்னில் நீயே
இணைந்து நின்றாய்/
பின்னல் தன்னில் சூடி விட்டாய் /
வாழ்க்கை எல்லாம்
துணையாய் வந்தாய் /
ஆழ்கடல் போலே அமைதியும் தந்தாய் /
புவியும் அண்டமும்
சிறிதாய்ப் போகும் /
குவியும் நின்னிதழ் புன்னகை முன்னே/
-யாதுமறியான்.