கனமான சொற்கள்
கணக்கு வழக்கின்றி
களமிறக்குகிறேனென்ற
விமர்சன அங்குசம்
அவ்வப்போதென்
செவிப்பறையைச் சிகப்பாக்குகிறது;
சொற்களினும் கனக்கின்ற
வலிகளுக்கு சொந்தக்காரனிடம்
அவற்றை கிளறுபவர்களுக்கும்
மேதாவிலாசங்களாக
முன்னிறுத்துபவர்களுக்கும்
கடிவாளம் போடுதற்கன்றி வேறெதற்கு
கனமான சொற்கள்?