உழவுச்சாவு

. உழவுச்சாவு...
😢😢😢😢😢😢😢😢😢😢😢
புவி முழுக்க மண்ணிருந்தும் நதியோரம் பயிர் செய்தோம் - அதை
புழுதியாக அட்டுவிக்க( அழித்துவிக்க ) புகுந்தது தான் 100நாள் வேலை...

விதைகளின்றி முளையாது அனங்களின்றி(வருத்தம்)விளையாது - அறிந்தும்
விளைவைப் பற்றி நினையாமல் வீழ்வது தான் நம் வருத்தம் ...

வீதியோரம் புல்சிரைத்து விதைத்துப்பார் நெல் மணியை - வயலன்றி
அம்பணம் (மரக்கால்)நெல் விளைவிக்க கொம்பனாலும் முடியாது...

அயிணி(உணவு)யிங்கே ஓர்உயிர்க்கும் அயர்ந்து தூங்கக் கிடைக்காது - தெரிந்தும்
திருவிழாவாய்ச் சாலையோரம் திண்ணைதூங்கும் வேலையிது...

நல் அரசன் ஆட்சியென்றால் நகர்வலத்தில் நிலையறிவான் - ஆயிடை(அவ்விடத்து)
வேலையத்த வேலையதை
வேரறுப்பான் மறுநொடியே....

ஏமாற்றல் நாடெல்லாம் எழிலி(முகில்)யாய் சூழ்ந்திருச்சு - அதனால்
ஓட்டுக்கான வேட்டையாக நாட்டைப் பழி ஆக்குகிறான்...

கண்அவிந்த குருடனுக்கும் கனவில் தோன்றா இத்திட்டம் - கடவி(விரைந்து)
மண்ணில் மனிதன் மறிப்பதைத்தான் மடையர்களாய்க் கண்டுணர்வோம்...

மடவர்(அறிவில்லாதவர்) இங்கே பலரும்தான் மனமுவந்து சொல்லிடுவேன் - இனியும்
மதிபிறந்து வாழாட்டி சதியுனக்கு நீயே தான்...

மிசை(வானம்)யளவு பணமிருந்தால் மீட்டிடுமா பசிப்பிணியில் - மனிதா
தசைநோக உழையாமல் தரமாட்டாள் புவித்தாயோ...

பிரம்பு கொண்டு அடித்து நீயும் முரம்பு(மேட்டு நிலம்) திருத்த முடியாது - வேறு வழி
நரம்பு புடைக்க ஏர்தொடுத்து நயம்செய்தால் பயிர் விளையும்...

உழவுச்சாவு நிகழ்வதை நாம் ஒன்றிணைந்து தடுக்காட்டி - விளைவோ
உறுப்பு தானம் பெறக்கூட ஒருவருமே மீளமாட்டோம் ....

மூதிலை(முதிர்ந்த இலை) யாய் இத்திட்டம் முறிந்து கீழே விழ வேண்டும் - அன்று
மாவிலையால் மாலை செய்து மைந்த(விரும்பிய)ணிவோம் பெருமையுற...

🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝

எழுதியவர் : க. செல்வராசு (26-Nov-22, 8:54 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 38

மேலே