காதல் கனவுகள் நிறைவேறும்

காதல் கனவுகள் நிறைவேறும்..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷⚘

தயங்கித் தயங்கித்
தட்டாமலேயே நிற்கிறேன்
நெடுநேரமாய் ! -நின்

கோயிற்கதவுகளோ
வாயிற்கதவுகளோ
திறக்கப்படாமலேயே
இறுகிக் கிடக்கின்றன !

தட்டுவேன் திடமாக
திறக்கும்வரை
இன்றேல்
முட்டி மோதி
உடைத்துத் திறப்பேன் - என்
உள்ளக் கதவுகளை !

தட்டுங்கள் முட்டுங்கள்
தள்ளுங்கள் வெல்லுங்கள் .

கதவுகள் யாவும்
திறந்திடும்
கனவுகள் யாவும்
நடந்திடும் !!

- யாதுமறியான்.

எழுதியவர் : .-யாதுமறியான். (28-Nov-22, 5:18 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 80

மேலே