வாழ்ந்துப் பார்த்துவிடலாம்

வாசற்படி நீ இறங்கி
பூமியிலே கால்பதித்தால்
வீதியெங்கும் வெளிச்சம்.
ஒவ்வொரு அடியெடுத்து
அன்னமே நீ நடக்கையில்
பூச்சொரியுமே பூமரங்கள் .
கால்கொலுசு குலுங்கிட மானென
துள்ளி நீ ஓடுகையில்
தடதடக்குமே என்னிதய ரயில்
ஒர விழிப் பார்வையில்
ஓராயிரம் காவியங்கள்
படித்து கள்ளுண்ட
வண்டாகவே மயங்கினேன்.
பட்டாம் பூச்சியாய்
சிறகடித்து நீ பார்க்கையில்
விசிலடிச்சாங் குஞ்சாய்
கொட்டாட்டம் ஆடுதே
என் இளமை
வா பெண்ணே
வாழ்ந்துப் பார்த்துவிடலாம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Nov-22, 8:08 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 120

மேலே