என் கவிதையை எழுதுவதற்கு

என் கவிதையை எழுதுவதற்கு
தாள்களை தேடினேன்

பூசிய சாயத்தோடு உன்
இதழ்களை நீட்டினாய்

எழுதுகோல் தேடுகையில்
உன் விரல்களை கொடுத்தாய்

வெளிச்சங்கள் போதவில்லை
என்கிறேன்
மெல்ல அவிழ்த்தாய் உன் புன்னகையை

சொற்கள்
சொற்கள்

மண்டையை தட்டிக் கொண்டேன்

அசதியில் என்
மார்பில் சாய்ந்தாய்

ஒரு கரிய மேகத்தை
முகர்ந்துக் கொண்டிருந்தது
என் நாசி

பனிப்பாறையில்
தீமூட்டம் போல்

எங்கோ என் இதயம்
பளிங்குநீராய்
உருகிக் கொண்டிருந்தது
...

எழுதியவர் : S. Ra (28-Nov-22, 10:04 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 93

மேலே