பெண்ணே சற்று நில்

பொன் அந்தி மாலையில்
பெண்ணே உன்னை சந்தித்தேன்
உந்தன் அழகினில் மயங்கிய
எந்தன் மனமோ
பட்டாம்பூச்சிப்போல் உன்னையே
சுற்றி சுற்றி வருது...!!

கண்டதும் காதல் என்பார்களே
அது இதுதானோ
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
பள்ளியில் புதிதாய் சேர்ந்த
மாணவனைப்போல்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்..!!

தடம் மாறி போகாமல் இருக்க
உந்தன் காதல் பள்ளியில்
நீ நடத்தும் விழிமொழி
பாடத்தை தப்பில்லாமல்
கற்றுக்கொள்வதற்கும்
என்னை கைபிடித்து
உன்னோடு கூட்டி செல்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Nov-22, 7:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : penne satru nil
பார்வை : 282

மேலே