துடுப்பு

அசைந்தாடும்
கடல் அலையில்
ஆடாமல் அசையாமல்
செல்லும் படகுக்கு
"துடுப்பே" ஆதாரம்...!!

அந்த "துடுப்பு" கர்வம் கொண்டு படகோட்டிக்கு பகையாக மாறி
அலைகள் அழைக்கும் திசையில்
பயணம் செய்தால்
செல்லுமிடம் கேள்விக்குறியே...??

வாழ்க்கை கடலில் சில மனிதர்கள்
எனக்கு எல்லாம் தெரியுமென்று
"துடுப்பை" போல் கர்வம் கொண்டு
போகும் பாதை புரியாமல்
சிக்கி தவிக்கின்றார்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Dec-22, 6:44 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : tuduppu
பார்வை : 216

மேலே