அதில் தப்பில்லை

அதில் தப்பில்லை.

தமிழர் தம் பெருமை பேசு,
அதில் தப்பில்லை.

தஞ்சை பெரிய கோவில்
புகழ் பேசு - சேர்த்தே நம்
சோழர் தம் பெருமை பேசு,
அதில் தப்பில்லை.

மாமல்லபுரம் சிற்பங்கள்
அழகு பேசு - சேர்த்தே
ஐங்கோர்வாட் கட்டிய நம்
பல்லவர் தம் பெருமை பேசு,
அதில் தப்பில்லை.

கீழடியார் மேலடியார்
என்று தேவாரம் பாடு,
அதில் தப்பில்லை

ஏன்? இன்றும் தமிழர்
அறிவும் ஆற்றலும்
மழுங்கவில்லை என்று
C.V ராமன், ராமானுஜன்,
பிச்சை... அப்துல்கலாம்...என
பட்டியல் இட்டு
அவர்கள் தம் பெருமையை
பட்டி தொட்டி எல்லாம்
சென்று முழங்கிடு,
நானும் வருகிறேன்.

ஆனால் ....! ஆனால்..!!
நம் ஊரை சுற்றி பார்க்க
வருகிறானே? அவன்
நம் ஊரை பார்த்து விட்டு....!!
எனது உனது கதைகளை
எல்லாம் நம்புவானா?
அதில் தப்பில்லை!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (2-Dec-22, 8:17 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : athil thappillai
பார்வை : 69

மேலே