மதுரை மல்லி

ஆளைத் தூக்கிடும் குண்டு
மல்லி.
வாழாக் குமாரி நட்ட
மல்லி.
வாழைத் தோப்பு பக்கத்து
மல்லி.
என்னை வளைச்சுப் போட்ட
சின்னமல்லி.

வாடைக் காற்று தொட்ட
மல்லி.
பருவ மழை முத்தமிட்ட
மல்லி.
காலைப் பனி போர்த்திய
மல்லி.
மாலையிலே மலர்ந்திருந்த
வெள்ளை மல்லி.

சாரைச் சடையில் ஏறிடும்
மல்லி.
சாமத்துச் சல்லாபம் கண்டிடும்
மல்லி.
சங்கதியின் போது கசங்கிடும்
மல்லி.
சங்கோசம் கொண்டு உதிர்ந்திடும்
மதுரை மல்லி.

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 7:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : mathurai malli
பார்வை : 78

மேலே