சூரியன் மறைகிறான்

சூரியன் மறைகிறான்

வட்ட முகம் சிவக்க
சூரியன்
விடைபெற்று
கொண்டிருக்கிறான்

என்ன கோபமோ?

நாள் முழுவதும்
பயணபட்டு
மனித வாழ்க்கையை
கண்டதால்
கோப பட்டிருப்பானோ?

அவனை
ஆசுவாசப்படுத்தி
மலை முகடுக்குள்

அமிழ்த்தி வைக்க
அங்கிருக்கும்
மலை தொடர்கள்
தயாராய்
இருக்கின்றன

வானம் கூட
அவனது
பிரிவிற்கு
முகம் கறுத்து
இருளடைந்து
போய் கொண்டிருக்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Dec-22, 11:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 105

மேலே