செவ்விதழ் திறந்து செந்தமிழ்நீ பாடினால்

செவ்விதழ் திறந்து செந்தமிழ்நீ பாடினால்
செந்தாமரை அந்திப் பொழுதிலும் மலரும்
தேய்பிறை நிலவையே தொடர்ந்து நீபார்த்தால்
பளிச்சென்று முழுநில வாய்நிலா மாறிவிடும்
அந்தியின் அல்லி மலரோ
உன்னை சந்திப் பதற்கேகாத் திருக்குமே !