உருவத்தில் நிலவுன்னிடம் போட்டியிடுது பாரடி

பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
கருநிறக் கூந்தல் காற்றிலாடும் அழகென்னடி ராதா ராதா
உருவத்தில் நிலவுன்னி டம்போட்டி யிடுதுபா ரடிராதா ராதா
திருமணம் என்றால் இப்படி நாணுவது ஏனடி ராதா !

பாடல் குறிப்பு :
கண்ணதாசனின் எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி
ராதா ராதா என்ற பாடல் வரியை முதலடியாக எடுத்தாண்டு வடிவமைக்கப் பெற்ற
அறுசீர் கழி நெடில் ஆசிரிய விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-22, 3:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே