வாததேகிகட்குக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மாட்டுப் பரங்கிவங்கம் மாமுருங்கை வெள்ளவரை
நாட்டுக்,கூ ரப்பிஞ்சு நற்கருணை - காட்டுளுறை
மாகருணை யுங்கருவில் வாதத்தெ ழுந்துவந்த
தேகருணை நற்கறியாந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

வாதவுடலோர் கல்யாணப்பூசனி, கத்தரிக்காய், வழுதுளங்காய், முருங்கைப்பிஞ்சு, வெள்ளையவரைக்காய், மிதிபாகல், காராக்கருணை, காட்டுக்கருணை ஆகியவற்றை உண்ணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-22, 1:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2

மேலே