வாததேகிகட்குக் கீரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேனிமுன்னை யாரைநறும் வேளைமணத் தக்காளி
யானைநெருஞ் சில்முசுக்கை யப்பைநெடுங் - கானிலுறை
மூக்குரட்டை நல்வசலை முன்பிவைக ளிற்கீரை
பாக்குவர்வா யுத்தேகர்க்(கு) ஆய்ந்து

- பதார்த்த குண சிந்தாமணி

இத்தேகியர் குப்பைமேனி, முன்னை, ஆரை, நல்வேளை, மணித்தக்காளி, யானை நெருஞ்சில், முசுமுசுக்கை, அப்பைக் கோவை, காட்டு மூக்குரட்டை, நல்வசலை ஆகிய கீரைகளை உண்ணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-22, 1:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே