சினிமாவும் கிறுக்கலும் உதவாது

எழுத்து படுத்து விட்டமையால்
கவின் சாரலரின் படைப்பிற்கு அதிலேயே கருத்திட என்னால் முடிய வில்லை. ஆகையால் இங்கு எழுதி கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

யாருக்கா கஅழுத போதும் தலைவன் நீயும். ஆகலாம்
ஊருக் காகநீ வாழ்ந்த போதில் தியாகி ஆகலாம்
போருக் காகத் நீதோள் கொடுத்தால் வீர னாகலாம்
சூரன்போல் வாய்பந்தல் போட்டால் அரசியல் வாதி ஆகலாம்


தேமாகாய் கருவிளம் தேமா. புளிமா தேமா. கூவிளகாய்
தேமா. கூவிள தேமா. தேமா. புளிமா கூவிள
தேமா. தேமா. தேமா. புளிமா. தேமா கூவிளம்
தேமாங்காய் தேமாங்காய் தேமா கருவிள தேமா கூவிள

குறள் வெண்பா

ஒருசீரும் மாற்றிட ஒப்பா ருவந்து
விருத்தம் இதுவா விளம்பு




கண்ணதானின் பாட்டின் முதல்வரி

யாருக் காக அழுத போதும் தலைவன் ஆகலாம்
என்பது என்பது உண்மையில் சரியில்லை


7 வது வரியில் வருவதிலிலும் கொஞ்சம் மாறி இருப்பதை பார்க்கலாம்
அது இப்படி இருக்கிறது

யாருக் கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்



1.மனிதன் என்பவன் தெய்வ மாகலாம் 5 சீர்கள்
(என்பவன் நடுவில் கூவிளச் சீர் ஒரே இடத்தில் வருகிறது )
2..வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம். ,6. சீர்கள்
3. வாழை போலத் தன்னை தந்து தியாகி ஆகலாம் 6 சீர்கள்
4.உருகி யோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
5.ஊருக் கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
6.உறவுக் கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
7.யாருக் கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
8. மனம் மனம் அது கோயி லாகலாம்

இந்த சினிமா பாட்டு அறுசீர் விருத்தமாக ஏற்றாலும் திருத்தங்களுக்கு உட்படுகிறது

முதல் அடி 5 சீர் கடைசி அடி 5 சீர் என்பதும், மற்றவை 6 சீர்கள் வருகிறது..... என்பவன், மனம், மனம் , அது எல்லாம் ஏற்புடைய அல்ல..


இது ஆசிரியத்துறை போலக் கொள்ளவும் முடியா நிலையில் உள்ளது.


இதுவா அதுவா எதுவென இரண்டில் ஒன்றை தேர்ந்தெடு

இப்படி அருமையாக அறுசீர் விருத்தம் எழுத என்ன கஷ்டம் என்று புரியவில்லை

சினிமா பாடல்கள் இசை அமைப்பாளரின் மெட்டுக்கு பாட்டாகும். இலக்கணப் பாட்டு அவர்கள் அறியாதாகும்..

கவிஞரின் சொந்தமான இலக்கணப் பாட்டை சினிமாவில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

அவர் எழுதிய மிகப் பிரபலமான கீழ்கண்ட பாடலுக்கு என்னவகை இலக்கணம் என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது.

இதல்லாம் கவிஞரை கட்டாயப் படுத்தி மெட்டுக்கு எழுத வைத்த
பாட்டாகும்


வான்நிலா நிலாஅல்ல உன்வாலிபம் நிலா
தேன்நிலா எனும்நிலா என்கேலி யின்நிலா
நீயில்லா தநாளி லெலாம்நான் தேய்ந்த நிலா
மானிலா தஊரில் சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை வெண்நிலா
தெய்வம் கல்லிலா பொதுதோகை யின்சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா
ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா

சினிமா மற்றவரின் பாடலைக் நாம் காபி அடிக்கத் தேவை இல்லை

யாப்பருங்கலக் காரிகையின் மாதிரிப்பாடல்களை எடுத்து நாம்
பாடல்களை தவறில்லா எழுத நன்று

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-22, 5:56 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே