மீண்டும் துளிர்கிறது..

நான்கு வருடமாக
இரவில் கனவு
வருகிறதோ இல்லையோ
கண்ணீர் வந்துவிடும்..

இரண்டு நாட்களாக
கண்ணீர் வருகிறதோ
இல்லையோ
கனவுகளில் நீ வருகிறாய்..

அடி இளம் பூவே
இருதயம் ஏனோ
மீண்டும் துளிர் விட்டு
வளர துவங்கியது..

காயம் கண்ட இதயம்
கண்ணீரில் மூழ்கி
கிடந்தது எடுத்து
துடைக்கிறாயடி நீ..

எழுதியவர் : (7-Dec-22, 11:28 am)
பார்வை : 73

மேலே