கனிவுடன் சொல்லுஞ் சொற்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

பொற்சபை தன்னில் அங்கே
..போற்றிடும் கற்றோர் சார்ந்து
பற்பல நூல்கள் கற்றுப்
..பற்றிய பொருள றிந்து
மற்றைய இலக்க ணங்கள்
..மதியுடன் கற்றுத் தேர்ந்து
சிற்சில பாடல் கள்தாம்
..செறிவுடன் எழுது வீரே! 1

பொற்றொடிப் பெண்ணே நீயும்
..புலமையும் பெற்ற பின்னே
முற்றவை தன்னில் வந்து
..முந்தியே நின்றே என்றும்
கற்றதில் கசடும் நீக்கிக்
..கனிவுடன் சொல்லுஞ் சொற்கள்
பொற்புடன் உன்னைக் காக்கும்
..போற்றுவேன் உன்னை நா(ளு)னும்! 2

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 2:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே