புன்னகைக்கும் பூக்கள் பொதிந்திருக்கும் சோகங்கள்

புன்னகைக்கும் பூக்கள் பொதிந்திருக்கும் சோகங்கள்

மலர் அங்காடிகளோ
கோபுரத்து வாசல்களோ

வாசம் வீசும்
வண்ண மலர்கள்
புன்னகையுடன்
காட்சி தருகிறது

அதன் புன்னகையின்
பின்னுள்தான்
எத்தனை சோகங்கள்

விடிந்தும் விடியாத
பொழுதில்
கிடைக்கும் கூலிக்காக
பறித்து களைக்கும்
ஏழைகள் கூட்டம்
அதில் சிறு குழந்தைகளும்
அடக்கம்

பறித்த மலர்களை
அடித்து பேசி
விவசாயிடம் வாங்கி
செல்லும் வியாபார
தந்திரம்

வாங்கிய மலர்களை
பிரித்து சிறு
வியாபாரிகளுக்கு
வழங்கும் அவசரம்

அவர்களுக்கோ
மாலை மங்குமுன்
மலர்களின் மரணத்திற்கு
முன்
நம்மை வாங்க
வைக்க நிர்பந்தம்

வண்ண வண்ணமாய்
மலர்கள் புன்னகையுடன்தான்
நமக்காக
காத்திருக்கின்றன

அதன் புன்னகைக்கு
பின்னே
விவசாயி தொழிலாளி
வியாபாரிகளின்
சோக போராட்டங்களை
உள்ளுக்குள் வைத்தபடி

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Dec-22, 10:55 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 141

மேலே