💕அம்மா💕
அம்மா...
உன்னை பற்றி கவி
எழுத நினைக்கும்போது...
எழுத்துகள் போட்டி
போட்டு சேர்கின்றன...
வார்த்தைகள் வரிசை
வரிசையாய் நிக்கின்றன கவிதைகள்
''கவிதைக்கு'' கவிதை போட்டியா...? என்று
என்னை துரத்தி துரத்தி
அடிக்கின்றன...!!!
தாயே...
உனக்கு நான் சேயா
பிறந்தது எத்தனை ஜென்மம்
தவமிருதேன் தெரியவில்லை...
அத்தனை ஜென்மமும்
எனக்கு வரம் தானா என்றும்
புரியவில்லை...
அன்னையே...
உன் மடியில் என் மரணம்
என்றால் மீண்டும் எனக்கு
ஜனனம் தான்...!!!