மாண்டிடுமா

நீ போட்ட காதல் விதை
**************************

புல்லாக முளையிடுமா?
முள்ளாக விளைந்திடுமா?
பூவாக மணம் தருமா?
கூவம் போல் நாறிடுமா ?

வேம்பாகக் கசக்குமா?
மா பலா போல் சுவைத்திடுமா.?
மழைக்குக் குடையாகிடுமா ?
வெயிலுக்கு நிழல் தந்திடுமா?

வேரோடு நிலம் காக்குமா?
கிளை விட்டுப் பணம் கொடுக்குமா ?
விதை கொட்டி வம்சம் பெருக்குமா?
பல ஆண்டு வரை உறுதியாய்
உறுதுணையாய் நிற்குமா?

என் இறுதிப் பயணத்தின் போதும்
உறுதிப் பாடை கொடுக்குமா?
இல்லை சாதி என்னும்
இடி விழுந்து இறக்குமா?
இத்தனைக்கும் இடம் இன்றி
முளையிலே கரிகிடுமா ?
போட்ட விதை மண்ணோடு மாண்டிடுமா?

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 6:47 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே