மனத் தைரியம்
துணிந்து நின்றிடு
துணிவை வளர்த்திடு/
உனது மனதில்
தைரியம் விதைத்திடு /
எதிரியை வென்றிடு
துரோகியைக் கடந்திடு /
காலத்தைக் கணக்கிடு
சாதனையை எழுதிடு /
சரித்திரம் படைத்திடு
வலிமையை விரட்டிடு/
விவேகம் காட்டிடு
வீரனாய் வலம் வந்திடு /
வெற்றியைத் தொட்டிடு
புகழ்ச்சியைத் கூட்டிடு/
மகிழ்ச்சியைப் பெருக்கிடு
வீழ்ச்சியை ஒதுக்கிடு /
காட்சியைப் பிடித்திடு
காந்தமாய் அணைத்திடு/
தீயாய் நின்றிடு
தீயதை அழிச்சிடு /

