மார்கழி மாதம்

மார்கழி மாதம் பிறந்து விட்டால்
மலர்ந்தும் மலராத
அதிகாலையில்
ஆண்களும் பெண்களும்
எழுந்து குளித்து விட்டு

பெண்கள் வாசல் தெளித்து
கோலம் போட

ஆண்கள் கோவிலுக்கு சென்று
திருப்பாவை, திருவெம்பாவை
பாடி பஜனைகள் செய்து மகிழ

சிறுவர்கள் பூக்களை பறித்து வர
சிறுமியர்கள் மாட்டுச்சாணியில்
அதனை வைத்து அழகுப் பார்க்க

பிறகு கோவிலுக்கு சென்று
பொங்கலும், சுண்டலும்
வாங்கி உண்டு மகிழ்ந்த காலங்கள்
அடடா உண்மையில் அருமையான
வசந்த கால நினைவுகள்

அந்த காலத்தில்
நாம் அனுபவித்த இன்பங்களை
இந்த கால குழந்தைகளுக்கு சொல்லி மகிழ்ச்சிக் கொள்ள
மீண்டும் வருமா
அந்த மார்கழி மாதம் என்று
ஏக்கத்துடன் அந்த காலத்து
மார்கழி மாத குழந்தைகள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Dec-22, 7:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : margali maadham
பார்வை : 330

மேலே