எண்ணமெல்லாம் நீயாய்

பெற்ற அன்னை மனம்
பதறுதடா/
உயிரற்ற உடலாய் உலகில்
உலாவுதடா/
திரையுரிவில் உன்னைப் பார்த்து மெழுகானதடா/

எதிர் பார்த்திடும் மனமோ
ஏங்குதடா /
நீ இல்லையென்பதை ஏற்றிட
மறுக்குதடா/
பாலூட்டிய தாயுள்ளம் பதறியே
கலங்குதடா /

என் மடியேற்றிய சுடர்க்கொடி
நீயடா/
விழி மூடி சுடரணைத்தாய்
ஏனடா/
எண்ணமெல்லாம் நீயாய் இருளோடு வாழ்க்கையடா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 7:20 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 178

மேலே