சிலேட்டும தேசிகட்கு ரசம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கந்தாமஞ் செங்க டுகுசத குப்பைதரா
வெந்தயங் கொத்துமலி வேளைசுக்கு - முந்தகத்தி
தூறுகுறிஞ் சாபாகல் தும்பையிச்சா கங்க(ள்)வெந்த
சாறுகப தேகர்க்காஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

சிலேட்டும் உடலோர் ஓமம், செங்கடுகு, சதகுப்பை, வெந்தயம், கொத்துமல்லி, வேளை, சுக்கு, அகத்தி, குறிஞ்சா, பாகல், தும்பை இவற்றின் இலைகளை அவித்து இறுத்த நீரில் ரசம் வைத்துண்பது சிலேட்டும உடம்பினர்க்கு நல்லது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Dec-22, 12:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே