சிலேட்டும தேகிகட்கு வற்றல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுண்டைமணித் தக்காளி தூதுணம்பி ரண்டையா
தொண்டைமுள்ளி பேய்ப்புடலை தொண்டைசிம்மை - கண்டதங்
கத்தரிநெல் லிப்பிஞ்சு காநரந்தம் பிஞ்சிவைகள்
ஒத்தவற்றல் ஐத்தேகர்க்(கு) உண்

- பதார்த்த குண சிந்தாமணி

சுண்டை, மணித்தக்காளி, தூதுணம், பிரண்டை, கோவை, முள்ளி, பேய்ப்புடல், ஆதொண்டை, அவரை, கண்டங்கத்தரி, இவற்றின் காய்களையும் நெல்லி, காட்டு நாரத்தைப் பிஞ்சுகளையும் வற்றல்களாக உண்பது சிலேட்டும் உடலோர்க்குச் சிறந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Dec-22, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே