இரசிக்கின்ற மனதில் மட்டுதான் வன்மம் குடிபுகுவதில்லை
இரசிக்கின்ற மனதில் மட்டுதான் வன்மம் குடிபுகுவதில்லை .. Am I right?
குறைசொல்லிகளின் சில பதிவுகள் கண்ணில் படாமலேயே இருக்கலாம் இன்னும் இந்த முகநூல் மாறவே இல்லை 2005 டூ 2010 முகநூல் அவ்ளோ அழகா இருந்த காலம்
ஒரு ஆணோ பெண்ணோ சின்ன சின்ன விஷயங்கள் அவங்களுக்கு தெரிஞ்சவரை பகிர்ந்துக்கறாங்க .. ரசிங்க லைக் பணணும்னு இல்லை .. ஆர்ட்டின் போடணும்னு இல்லை .. இதென்ன பெரிய விஷயமா ன்னு எக்காளம் பண்ணி சிரிக்காம போங்க ..
வாழ்க்கையில் எந்த ஒரு சிச்சுவேஷன்லயும், எந்த ஒரு விஷயத்தையும் சிறு மென் முறுவலுடன் இரசனையுடன் ஒருவரால் கடக்க முடியுமென்றால்.. அவரால் எல்லா இடங்களிலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் . யாரப்படியோ தெரியாது நான் அப்படித்தான் .. என் பேரிடரின் நடுவிலும் இதோ என் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் புன்னகைக்கு மறுப்புன்னகை செய்துவிடுகிறேன் வடுக்களின் சாயங்களை தெரித்துப்போவதில் அர்த்தங்களே இருப்பதில்லை..
2003 கடை / 2004 வரை ஆர்குட் தான்
நண்பி ஒருவள் சொல்கிறாள் February 04th 2004 ஒரு சோஷியல் மீடியா ஓப்பன் பண்ணிருக்காங்க டா .. ன்னு .. Feb 14th தான் என் நிஜ பிறந்தநாளும் .. அப்போதும் அதைப்பற்றித்தான் நட்புகள் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்
ஆமாம் இந்த முகநூலின் தொடக்கம் அங்கிருந்துதான்
Management Trainee யா பிஸியா இருந்ததனாலே .. 2004 ஆம் ஆண்டு விட்டுவிட்டேன்
ஆர்குட் டிலிருந்து நண்பர்கள் விலகிடிருந்தார்கள் ..
2005 தொடக்கத்தில் முகநூல் நுழைந்தேன்
நட்புகளின் அறிவுரையால்
2005 டூ 2010 செம்மங்க .. சந்தோஷமா இருக்க மட்டும்தான் வருவோம்...
என் மட்டும் அல்ல என் சார் எல்லோருடைய இலக்கும் சந்தோஷத்திற்கானது தான் .
2010 க்கு பின்பு இங்க மெது மெதுவா பிரச்சனைகள் தலை எடுக்கத் தொடங்கியது ..
எந்த ஒரு சூழலையும் நம்மால் ரசிக்க முடியவில்லை எனும் நிலை வரும்போது நாம் நமக்கான இடத்தை மாற்றிவிடவேண்டும் ..
ஏனெனில் நம்சார் இடமும் சூழலும் மனிதர்களாலும் தான் நாம் பயணப்படும் ஒவ்வொருக் கட்டங்களிலும் (நல்ல+கெட்ட) இயல்புகளை கற்றுக்கொடுக்கிறது மாறிவரும் காலம். நாமும் கற்றுக்கொள்கிறோம்.
"இயல்புகள் என்பது நாம் பிறக்கும் போது நம்முடன் ஒட்டிப்பிறப்பதில்லை"
2010 க்கு பின்பு இந்த இடம் பல பிரச்சனைகளுக்கு உபயோகப்படத் தொடஙகியது
நல்ல நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்
எங்களில் சிலப்பேர் மட்டும் விட்டுபோனவர்களின் மீதமிருந்த இடத்தை நிரப்ப முடியாத காலி நிரப்பில் சிப்பஙகளாகி வாழ்ந்திருந்தோம்
எங்களையும் வாழ்க்கை தவறிவிழும் பழன த்திற்குள் தள்ளி பதம் பார்த்தது .
நிறைய காதல், காமம் . ஆரம்ப த்தில் புனிதமென தொடஙகிய அனைத்தும் Entire life goes on thru the dream of lust என்பதைப்போல எத்தனை எத்தனையோ சரி தவறுகள் மாறி மாறி .. ஒருக் கட்டத் தில் நாங்கள் சமன் நிலைக்கு வந்து நிற்கிறோம்..
ஆனால் யாருடைய உயிரும் வாழ்க்கையும் அழியும்படியான நேரடி/மறைமுக வன்மங்கள் என அதுவரைப் பார்த்ததே இல்லை.. தவறிவிட்டோமே கெட்டுப்போய்விட்டோமே அன்றி
மனதால் கெட்டவர்களாக மாறிக் கொள்ள முடியவில்லை .பை பை சொல்லி பிரிந்தபோதும் கூட அதே பிரியம் மாறாமல் கட்டிப்பிடித்துதான் பிரிந்து போயிருக்கிறோம். இதெல்லாம் எதனால் என யோசிக்கிறபோது
எங்களிடம் இருக்கிற எச்சூழலையும் இரசிக்கும் .. இரசித்துக் கடக்கும் தன்மை
இன்றும் இங்கு கண்ணில் படும் சில பதிவுகளில் என் கருத்துகளோ ஆர்ட்டின்களோ விழாவிடினும் பார்த்தநொடி இரசித்துக் கடக்கிறேன் ..
(இன்னைக்கு அப்படி இருக்கா? சிறு விஷயத்திற்கும் வன்மத்தைதான் தெரிக்கிறார்கள்) இம்முகநூலை எச்சூழலில் விட்டு நகர்ந்தோமோ
அதேதான் கிடக்கிறது ..
எங்கோ படித்திருக்கிறேன்..
""பிறருடைய துன்பத்தில் எதிரிகள் கூட
ஆதாயம் தேடிக் கொள்வதில்லை ..""
இரசித்துப் பாருங்கள்
போகின்ற பாதையில்
ஏதோ பெயர்த் தெரியாத புதுப்பூக்களின் வாசத்தையாவது
நாம் யாரென்று அறியாமலேயே
தூவிக் கொண்டுப் போகலாமே
இரசித்துப் பாருங்கள்
பிறருடைய கண்களுக்கு நீங்கள்
மழைவில்லின் நிறமாதிரி ஆகியிருப்பதை
அறிவீர்கள்
இரசித்துப் பாருங்கள்
உங்கள் பிழைகள் கூட அழகாகும் ..
புன்னகைத்துப் பாருங்கள்
உங்கள் அறையின்
கண்ணாடி வெட்கம் கொள்வதைல்
உணர்வீர்கள்
நேரங்கள் நிமிடங்கள் போய்க்கொண்டே இருக்கின்றன .. ஆனால் இன்னும் சில மிச்சமிருக்கின்றன .. இழந்த நேரங்கள் இழந்ததாகவே இருக்கட்டும் .
இனியாவது
எல்லாவற்றையும் எல்லாவற்றிலும்
இரசியுங்கள்
இரசிக்கின்ற மனதில் மட்டுமே வன்மம் குடிபுகுவதில்லை
எங்கப்பா தவறியபோது தான் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை
உலுக்கியது "நான் உயிருடன் இருக்கும்போதே பக்குவப்பட்டுக்கொள்"
"பக்குவப்பட்டுக்கொள் பக்குவப்பட்டுக்கொள் " என்று சொல்லும்போதெல்லாம் நான் பக்குவப்பட்டிருப்பேனானால் இன்று நீ இல்லாமலிருக்கும் இச்சூழலை எளிதில் கடக்கப் பழகிக் கொண்டிருப்பேன் தானே .
இப்போது எச்சூழலையும் எங்களால் just like that என்று கடக்கமுடிகிறது பல காலமாய் பக்குவம் அடைந்திருக்கிறோம். தெளிவடைந்திருக்கிறோம்
காதலோ காமமோ துள்ளலோ எள்ளலோ என வாசித்துக் கடக்கும்போது இரசிப்பதைத் தவிர வேறேதும் தெரிவதாய்தென்படுவதாய் இல்லை.
"எனக்குப் பிடித்தால் ஏற்பேன் பிடிக்காவிடில் நோ சொல்வேன் நோ என்றால் நோ தான்"
இதுபோன்ற வசனங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறோம் (இதுபோலொரு சூழலையே அனுமதிப்பதில்லை) வேண்டியதெல்லாம் நம் சுதந்திரம் (Nothing but self control) அப்போதும் சுதந்திரமாய்த்தான் வாழ்ந்தோம் (But our controls were uncontrolled that time)
பூக்காரன் கவிதைகள் - பைராகி