சிலேட்டும தேகிகட்கு ஊறுகாய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மஞ்சள் மிளகுசுண்டை வாழைத்தண் டோடுமாம்
பிஞ்சாலம் பிஞ்சத்திப் பிஞ்சுகளும் - விஞ்சுகபம்
நூறுநறுந் தூதுணமு நொய்யபா கற்பிஞ்சும்
ஊறுகா யைத்தேகர்க்(கு) ஓது

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வுடலோர் பசுமஞ்சள், மிளகு, சுண்டை, வாழை இளந்தண்டு, மாம்பிஞ்சு, அத்திப்பிஞ்சு, தூதுணம், மிதிபாகற் பிஞ்சு ஆகியவற்றின் ஊறுகாய்களை உணவில் சேர்ப்பது சிறந்தது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-22, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே