அவள் ஒரு குழந்தை
ஏனோ பல வருடங்கள் கழித்து பார்த்தாலும் அவள் இன்றும் குழந்தை போல்...
தந்தையை போல் அறைந்ததும்...
தாயைப் போல அணைத்ததும்..
நடந்த ஒரு அற்புதம்...
நதியின் பெயர் கொண்டதால் என்னவோ இன்னும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறாய்...
விரைவில் வெற்றி எனும் பெருங்கடலினை சந்திப்பாய்...
கண்முன்னே ஒரு தேவதை அவள் ஒரு நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டு..
ஏதோ உந்தன் குணம் இன்றும் குழந்தையாகவே இருக்கிறது...
ஏதோ காலத்தின் கட்டாயம்...
சங்கின் நிறம் வெண்மை என்பது போல் உந்தன் குணம் அதிலும் சிறந்த குழந்தையின் குணம் என்பதை எப்பொழுது தான் புரிந்து கொள்வார்கள்.
நீ ஒரு குழந்தை....