தற்கால பலாபல பதார்த்தம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

திரிபதார்த் தம்பலமே செய்யு முடனே
திரிபதார்த் தம்மபலஞ் செய்யுந் - தெரிமுறையே
சீதவம்பு ணர்ச்சியூன் றேனு சொரிநறும்பா
லாதவம்பு ணர்ச்சிதை லம்

- பதார்த்த குண சிந்தாமணி

குளிர்ந்த சலம், நாவுக்கு ருசியைத் தருகிற மாமிசம், பசும்பால் இம்மூன்றும் தற்கால பலத்தைச் செய்யும். கடூர வெய்யில், புணர்ச்சி, நற்றயில குளியல் இந்த மூன்றும் துர்பலத்தைச் செய்யும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Dec-22, 3:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே