கருங்கல்வீடு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அலங்கா ரமுமதமு மக்கினியு நீங்குந்
துலங்கா தவமுந் துலங்கா - திலங்க
வருங்கலகப் பித்து மனத்துயரை நோயுங்
கருங்கலகப் பித்தர்க்குக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

கருங்கல் வீட்டில் வசித்தால் உலகில் விளங்கும் சூரிய, சந்திர கிரணங்கள் இல்லை. இதனால் அழகும், வீரியமும், உதராக்கினியும் நீங்கும். பித்தம், சிலேட்டுமம் இவற்றால் துன்பலம் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 8:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே