இன்றைய காதல் அன்றைய காதல் சுகம் வருமா 555

***இன்றைய காதல் அன்றைய காதல் சுகம் வருமா 555 ***


காதல்...


அவள்
மனதில் இடம் பிடிக்க...

அவள் வரும் பாதையில்
எத்தனை நாள் காத்திருந்து...

ஜாடை மொழி பேசி ஒர
பார்வையில் உள்ளம் பறிகொடுத்து...

இதழ்கள் அசைவில்
வார்த்தைகளை பரிமாறிக்கொண்டு...

ஓரப்பார்வையில் ஓராயிரம்
சந்தோசத்துடன் திரும்புவது
...

எத்தனை
சந்தோசம் மனதுக்கு...

பத்து நிமிடம் சந்தித்து பேச
எத்தனை நாள் கா
த்திருக்க வேண்டும்...

அரை கிலோமீட்டர் தூரம்
நாப்புறமும் ஆட்கள் பார்க்க வேண்டும்...

அவள் முகம்
பார்த்து ஒரு நிமிடம் பேச...

நான்கு நிமிடம் கண்கள்
சுற்ற வேண்டும்...

அன்றைய காதல் என்று
நினைத்தாலும் அத்தனை சுகம்...

இன்றைய காதலில் பத்து
நிமிடத்தில் ஆயிரம்
வார்த்தைகள்...

மறுநிமிடம் பேச
வார்த்தைகள் ஏது...

இன்றைய காதலின் சுகம்
அன்றைய காதலின் சுகம்போல் வருமா.....


***முதல்பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (26-Dec-22, 4:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 305

மேலே