ஈன்றவள்

மலடி எனும்
பெயரை முறிக்க
உருவெடுத்தவன்

உதிரும்
சொட்ட சொட்ட
புறம் தள்ளியவள்

என் முகம்
காணும் முன்னே
எனக்காக கனவுகளை சுமந்தவள்

என் கை கால்கள்
அவளை தாக்கியும்
புன்னகைத்தவள்

மெது மெதுவாக
என்னை தாலாட்டி
சீராட்டி வளர்த்தவள்

எப்படி வேணாலும்
வாழ்ந்து விடலாம்
எனும் உலகத்தில்
இப்படித்தான்
வாழ வேண்டும்
என உரைத்தவள்

எத்தனை பிள்ளைகளை
ஈன்றாலும் எனக்கென
தனி இடத்தை
கொடுத்தவள்

அன்னையே
அனுதினமும்
உன் புன்னகையை
காண உன்னுடனே
இருக்க வேண்டும்

எத்தனை எத்தனை
உறவுகள் என்னை
மேம்படுத்தினாலும் அத்தனை
உறவுகளும் உனக்கு
ஈடாகுவதில்லை அம்மா

ஒரு நாளாவது
நான் உனக்கு
தாயாய் மாறி
நீ என் சேய்
ஆக கூடாதா

அப்படி உன்னை
என் கைகளில்
ஏந்தக்கூடாதா

இப்படி ஒரு
வரம் கேட்பேன்
இறைவனிடம்

எப்போதும் அன்பாய்
உன்னை
அணைத்துக் கொள்வேன் அம்மா

ஈன்றவளே உன்னை பத்தி கவிதை எழுத

குறைந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்

அன்னையின் பாசத்தில் உருகும் அன்பு மகன் குரு

எழுதியவர் : (29-Dec-22, 7:27 am)
Tanglish : eendraval
பார்வை : 118

மேலே