என் அழகு நிலவே 555

***என் அழகு நிலவே 555 ***


என்னவள்...


விண்ணில் வான் நிலா
உதிக்குமுன்னே...

மண்ணில் உதித்தது
ஒரு பெண் நிலவே...

தேய்ந்து வளரும்
வான் நிலா அல்ல நீ...

மணற்கேணி போல வற்றாத
அன்பு கொண்டவள் என்னவள் நீ...

மலரும் பூக்கள் எல்லாம்
உன்னைப்போல் பேசுவதில்லை...

அகமும் புறமும்
மலர்ந்து பேசும் என்னவள் நீ...

இதழ்
விரிக்கும் ரோஜாப்பூ...

ஜொலிக்கும் உன் தங்க
மேனிக்கு தங்கம் எதற்கு...

ஒளிரும் உன் கண்கள் இருக்க
வைர மூக்குத்தி எதற்கு...

நீல
வானத்திற்கு போட்டியாக...

என்னவளும் நீயும்
நீலவண்ண ஆடை உடுத்தி...

அழகு கண்ணாடி
நீ அணிந்து...

என் கரம் கோர்த்து
நாம் நடக்கயிலே...

புல்வெளிகள்
எல்லாம் பாதம் தொட...

வண்ண பூக்கள்
எல்லாம் உன்னை வாழ்த்த...

அள்ளி
உன்னை அனைக்கயிலே...

என் காதலியே
முத்தம் ஒன்று நீ கொடடி.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (3-Jan-23, 9:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 584

மேலே