ஆவணமற்ற ஆணவக்கொலை...

ஞமலி தானறியும் தனதாசை நிலையில்லை
மகுளி யுண்டால் போதுமென்றாகுமா...? வெற்றுக்
குமிழி யென்றால் குளம் நிறைந்திடுமா...? வயிற்றில்
வகுளி யுணர்ந்தால் வாடுமே வளமை...!

எவற்றையேனும் ஆளும்நோக்கில் திரிந்தவாறே பிதற்றி
எவற்றையோ ஆட்கொண்டும் நிலையின்றித் தவித்து
இறுதியென இருத்திடா மனநிலை!, நீர்த்திடாது
மறுதலிக்கும் வாழ்நாளில் எவ்வகை மனிதருக்குள்ளும்...!

ஒவ்வொரு தேவையும் நிறைவடைந்த பின்பும்
சூத்திரங்கள் பலவும் கையாளும் பேரவா!, என்றாலும்
மாற்றாரது தேவைதனை மண்ணள்ளித் தூற்றும்
மாண்பிற்கு இல்லையோ மரணிக்கும் இழுக்கு...?

தொடரும் வேடிக்கைகளில் தொடர்ச்சி நானாவேன்
இடரும் களைகளை எடுத்தெரியும் வேலாவேன்
படரும் பசுந்தளிரும் பரிதியின் பார்வைதன்னில்
மிடறும் மீளுமானால் மீட்சியுறும் கோமாளிதானே நான்...!

#அரசியலின்_நேர்மை_அடகுக்கடையில்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (7-Jan-23, 8:33 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 29

மேலே