புதிய அலைவீசும் நீல ---நதிநைல்

பொதியமலைத் தமிழ்வீதியில் பொலிந்து வந்த புதுக்கவிதையே
நதிநைலின் எழில்நீலம் தந்த விழியின் அழகே
அதிசய அந்தி வானத்தை வெல்லும் பேரெழிலே
மதிநுதல் மாலை எனும்மயக்கும் மஞ்சள் பொழுதே

பொதியமலை வீதி நடக்கும் பொலிவே
நதிநைலை வென்றிடும் நீல விழியே
அதிசய அந்திவானத் தையும்நீ வெல்வாய்
மதிநுதல்மா லைப்பொழு தே

பொதியமலை வீதி நடக்கும் பொலிவே
புதிய அலைவீசும் நீல ---நதிநைல்
அதிசய அந்திவானத் தையும்நீ வெல்வாய்
மதிநுதல்மா லைப்பொழு தே

----மூன்று வடிவில் பொலியும் நைல் அழகி
பயில்வோர் யப்படையாளமும் கண்டு மகிழ்க

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-23, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே