இறப்பின் பிறப்பு

வாழ்க்கை முடிந்த இடத்தில் துவங்கும் கதை. சுற்றி உறவுகளின் கூட்டம். மாட்டிய மலர்மாலை மணக்கிறது. வத்தியின் வாசம் வாசலை வழிகாட்டி வீசுகிறது. பறையின் ஓசை ஓங்கி ஒலிக்கிறது. பட்டாசு போக வேண்டிய நேரத்தை பார்க்கிறது.உறவுகள் கூடி அழுது மறுமுறை வருவாயா என அழைத்து நிற்கிறது.அரச அலங்காரமாய் பாடை கட்டி முடிக்கப்பட்டது. இதோ இறுதி ஊர்வலம் என கூறி பத்து கால் பயணம் துவங்கியது. பேசிய நினைவுகளையும் பார்த்த பொழுதுகளையும் எண்ணி மனம் ஒரு முறை சிலிர்க்கிறது. போக வேண்டிய இடம் வந்துசேர்ந்த பின். குழியில் இறக்கி கடைசி முறை முகம் பார்த்துவிட்டு அடக்க வாய்க்கு அரிசி போட்டு மண் போட்டு குழிமுடி குன்றுகட்டி கல் நட்டு வைத்து வீடு திரும்பினார்கள். வந்ததும் குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு அடுத்த சிந்தனைக்கு சென்றுவிட்டனர்.

அய்யோ இங்கு மண்ணில் புதைந்த மனிதனின் மரண ஓலம். அலறி அலறி அழுகிறானே கேட்கவில்லையா? கடலென கண்ணீர் பார்பார் இல்லையா? என்னவெல்லாம் எண்ணியிருந்தேன் எண்ணம் எல்லாம் மண்ணானதே. உங்களுக்கு உதவிக்கொண்டே இருந்தேன் எனக்கு உதவ எவரும் இல்லையா? கண்ணீர் விட்டு கதறி அழுதிர்களே கடைசியில் விட்டு செல்வதற்காக? உங்களுக்காக உழைதெனே என்னை மண் குழியில் புதைபதற்கா? அன்பை அள்ளி வைதெனே ஆதரவற்று நிற்பதற்கா? என்னை நினைவில்லையா? நேற்றைய பொழுது உங்களோடு உறவாடியவன். என்னை நினைவில்லையா? உங்களோடு உண்டு உரங்கியவன். அற்குள்ள மறந்திர்கள் என்னை ஒரு முறை நினையுங்கள். என்னை தனியாக விட்டு எங்கு சென்றிர்கள். என்னையும் அழைத்து செல்லுங்கள். உங்களுக்காகவே வாழ நான் வருகிறேன். எவரேனும் உதவுங்கள் உங்களுக்கு அடிமையாய் கிடக்கிறேன்.

என்னை காப்பாற்ற யாருமே இல்லையா. கேளுங்கள் என் ஓலதை கதரிகொண்டு இருக்கிறேன். இந்த கடவுளுக்கு கண் இல்லையா? நான் செய்த பாவம் என்ன? இறக்கமில்லதா இறைவனே உன்னை நம்பி இருந்தேனே. நீயும் கூட என்னை கைவிட்டாயா? பிறப்பால் உண்டான உறவுகள். பாசத்தால் கிடைத்த பந்தங்கள். வியர்வை சிந்தி கட்டிய வீடு. பார்த்து பார்த்து சேர்த்த பணம். எதுவுமே எனக்கு நிலையில்லையா?

நிலையற்ற உலகத்தில் ஏன் நான் பிறந்தேன் எதற்கு என் பிறப்பு எத்தனை துனம்பம் இதனை துன்பமும் இந்த நிலையற்ற வாழ்விர்ககவா "இறைவா எனக்கு ஏன் இந்த பிறப்பு என்னால் உனக்கு லாபமா நஷ்டமா லாபம் என்றால் என்ன லாபம் நஷ்டம் என்றால் ஏன் என்னை படைத்தாய் உன் பதில் வேண்டும்" என் வாழ்வின் அர்த்தம் என்ன யாரிடம் கேட்பேன்.

இதோ கல்லறையில் இருந்து காலத்தில் விடுபட்டவன் உங்களுக்கு கூறுகிறேன்.
வாழும் நாட்களில் அனைவர் மீதும் உண்மையான அன்போடு இருந்துகொள்ளுங்கள். இயன்றதை எல்லோருக்கும் செய்யுங்கள். உண்மையாய் பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். யாரையும் ஏமற்றதிர்கள். நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். அடுத்தவரை கலங்கடித்து வாழதிர்கள். உன்னால் முடிந்த வரை அனைவரையும் அன்பு செய் அது ஒன்று மட்டுமே நீ போகும் போது விட்டு செல்லும் ஒரு புத்தகம் ஆகும்

நான் கலங்கிய நிலையில் இருந்து சொல்கிறேன். இப்போதே உணருங்கள் இல்லையேல் என் நிலையில் நீங்கள் சொல்வதும் அடுத்தவருக்கு கேட்காது. "என்ன இது உங்களுக்கு கேட்கிறதா நீங்கள் தான் கடவுள்"
இவன்
த.பிரவின்

எழுதியவர் : த.பிரவின் குமார் (19-Jan-23, 2:31 pm)
சேர்த்தது : பிரவின் குமார் த
Tanglish : irappin pirappu
பார்வை : 76

மேலே