ஒரு தலை காதல்

ஈசல் ஆயுட்காலம் போல் நாம் பழகிய நாட்கள் குறைவு பயணித்த தூரமோ ஏராளம் உறவு எதுவென அறியும் முன்னமே ஒட்டி கொண்டது சட்டையில் உன் மனம்!!! மாய ஊஞ்சல் போல் மனதுக்குள் ஓங்கார குரலாய் நீ!! பல முறை காதலை கூறி நிராகரிப்பு பெற்றபின் கிடைத்த நிமிடங்களையாவது உன்னுடன் வாழ நினைத்தேன்!!! இதுவரை பெற்றிறாத தந்தை அன்பும் ஒரு ஆணின் முதல் மூச்சு காற்றும் உனக்கே தெரியாமல் என் மீது உன்னால் வீச கண்டேன்!!! இதற்காக என் கதாப்பாத்திரத்தை நீ எவ்வாறு வேண்டுமானாலும் இழிவாக யூகித்துகொள் !! அல்லது உன் வரிசையில் ஒருவளாக கூட வைத்துக்கொள் ஏனென்றால் எனக்கு மட்டுமே தெரியும் !! கிடைக்காத உன் மீது நான் கொண்ட காதலுக்காக கிடைத்த நிமிடங்களை உனக்கே கொடுத்த கதை !!! அலைபேசியில் உன் அழைப்பினை எண்ணி கை வருடி கொண்டிருக்கையில், தொந்தரவு செய்யாமல் கடந்து செல்கிறேன் ஈசல் ஆயுட்கால உறவில் தொடர்கதையை எதிர்பார்க்காமல்.

-. கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (22-Jan-23, 2:27 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 61

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே