நித்திரையில் நிதானித்து கொண்டு எழுந்தாள் அமலா!! ஆம் அதே கனா அதே வினா!! சிந்தையில் தோன்றியதால் சிந்திக்க தோன்றுபவையே!!! என்றும் இல்லாத அளவிற்கு மனதில் ஒரு சஞ்சாரம் !! பெரிதாய் ஒன்றும் பழகியதில்லை இருப்பினும் என் கிறுக்கல் வரிகளுக்கு சொந்த காரன் போல் ஓர் உணர்வு !!! என் ஏகாந்ததையும், வடுக்களையும் நான் கூறும் முன்னே உணர்ந்திருந்தான் !! அதன் காரணமோ என்னவோ கண்டவுடன் என் கவலைகள் அனைத்தையுமே மறந்திருந்தேன்!! வாழ்க்கையில் முதல் முறை எனக்குள்ளும் காதல் எட்டி பார்த்த நொடி இருப்பினும் பேசதான் நொடிகள் இல்லை!! ஏகாந்த காதலியாய் காணப்பட்ட என் ஆழ் மனதில் கண்டவுடன் ஒரு தடுமாற்றம் !!! விடுபட்ட வினாக்களின் விடைப்போல் திடீர் தோற்றம்; இருப்பினும் அவன் என்னவன் இல்லையே ஆதலால் கடந்து செல்வோம் . - கௌசல்யா சேகர்