நன்றிக்கடன்

மானுடப் பண்புகளில்
மகத்தானதென போற்றப்பட்டு
பெருமையடைய வைப்பது
இறைவன் அருளியது,
பிறர் செய்த உதவியை
இறக்கும் வரை மறக்காமல்
நினைத்து உதவுவது தான்

தோட்டத்தில் வளர்த்தத்
தென்னை மரம் நன்றிக் கடனாக
தானுண்ட நீரைத் தலையாலே
தந்து மக்களை மகிழ்வித்துத்
தானும் மகிழ்வதுபோல்
நாமும் அடுத்தவருக்கு உதவும்
நல்ல பண்பைப் பெறவேண்டும்

எழுதியவர் : கோ. கணபதி. (23-Jan-23, 2:53 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 25

மேலே