சாத்தான் என் நண்பன்

வேலை முடிந்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பினேன்.
உடைந்த நிலையில் பூட்டு கீழே கிடந்தது.
வெகுநேரம் தட்டியும் திறக்காத
கதவை ஓங்கி மிதித்தேன்
திறந்து கொண்டது..

உள்ளே சாத்தான்
சார்ஜில் போட்டிருந்த என் போனை எடுத்து ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தான்

"ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்டேன்.
தனிமையில் இருக்கும் போது ஆபாசப் படங்கள் பார்த்தால் "பேய் பயம்" வருவதில்லை என்று கூறிச் சென்றான்.

எழுதியவர் : திசை சங்கர் (26-Jan-23, 8:32 pm)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : saathaan en nanban
பார்வை : 37

மேலே