என்னைப் பற்றி நானே

"இவன் ஊரோ திருநெல்வேலி

இவன் மனம் ஒரு திறந்தவெளி

உள்ளுக்குள் யாரோ இறந்த வலி

மௌனமே இவனுக்குச் சிறந்த மொழி

கூடவே பிறந்தது இவனது வறுமை

கூட்டத்தில் இருந்தும் இவன் மட்டும் தனிமை

ஆறடி இருக்கும் இவன் நிறம் கருமை

பிரச்சனை வந்தாலும் இவனோ பொறுமை

சொந்தக்காரர் புண்ணியத்தால் இவன் படித்தான்

சோகங்கள் உள்ளிருந்தும் வெளி நடித்தான்

என்றேனும் சாதிக்கத்தான் இவன் துடித்தான்

நான்காண்டில் எப்படியோ பி.இ முடித்தான்

இவன் சாதிமதம் பார்த்ததில்லை

காசுபணம் சேர்த்ததில்லை

கெட்டவார்த்தை போட்டதில்லை

சாதி சொல்லிக் கேட்டதில்லை

திருமணத்திற்கு ஏங்கவில்லை நெஞ்சம்தான்

நிறுவனங்கள் இவன் ஊரில் கொஞ்சம்தான்

சென்னையிலே வந்திவனும் தஞ்சம் தான்

அன்றிருந்து அவனும் கொஞ்சம் கஞ்சம் தான்

சரியாக்கும் இவன் ஒரு தருவானம்

சரியாக இல்லாத வருமானம்

செல்லும் இடமெங்கும் அவமானம்

தோல்விக்கு இவனே உவமானம்

இல்லாத தூக்கங்களோடும்

சொல்லாத ஏக்கங்களோடும்

தினம் தினம் ஏற்படும் விடியலாய்

வாழ்க்கை நகர்கிறது...

எழுதியவர் : திசை சங்கர் (27-Jan-23, 4:44 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 104

மேலே