தத்துவம்
ஆயிரம் தத்துவங்கள் எழுதிய குரு ஒருவர் அழுது கொண்டிருந்தார்.
"என்ன ஆயிற்று குருவே?,
ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான் சிஷ்யன்.
"வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டம்"
என்றார்,குரு.
நிலைமையைப் புரிந்து கொண்ட சிஷ்யன் அவரைத் தனிமையில் விட்டுவிட்டு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்தான்.
அமைதியாயிருந்த சிஷ்யன் சில நிமிடங்களுக்குப் பின்,
"இந்த உலகில் கண்ணீரைவிடப் பெரிய தத்துவம் எதுவும் இல்லை" என்று தனது
முதல் தத்துவத்தை எழுதினான்.