விவசாயி நிலை

முப்போகம் நீர்த்து
விவசாய நிலத்தின்
தாகம் தீர்த்து வைக்க வேண்டிய மேகம் இவனுக்கு சோகம்
வார்த்து வைக்கிறது.

இவன் மண்ணில் வெங்காயம் விளைவிக்கிறான்
இவன் மனதிலோ பெருங்காயம் விளைகிறது

இவனுக்கு பாசனம் செய்ய வரும் நதியெல்லாம் பாசான நதியாகிறது.

இவன்
விளைவிக்கும் அரிசிகள் எல்லாம் இவன் வாய்க்கு அரிசியாகவில்லை வாய்க்கரிசியாக ஆகிறது

பூச்சிக்கொல்லிகள் பூச்சியை கொள்வதில்லை மாறாய் இவன் மூச்சியை கொள்கின்றன

இவன் இரு கை கூப்பி வணங்கியும்
இயற்கை இவன் நில இருக்கையில் அமராது இயற்கை எய்திக் கிடக்கிறது

இவன் வைத்த உரத்தில்
எதுவும் காய்த்துத் தொங்காததால் இவன் வைத்த மரத்தில் தன் இன்னுயிரை மாய்த்துத் தொங்குகிறான்

இவன் விளைவித்த மலர்கள்
சந்தைத் திடலில் கூவி
விற்கப்படாமல்
இவன் உடலில் தூவி
கற்கப்படுகிறது.

எழுதியவர் : Kumar (29-Jan-23, 9:39 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : vivasaayi nilai
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே