ராம நாமம்

ராம நாமம்
------------------

ராம நாமம் சதா ஜபித்திடு மனமே
ஏம பெருந்துயராம் அஞானம் விலக
இம்மை மறுமை போக்கும் ராமநாமம்
நம்மை உய்விக்கும் நம்மை உயர்த்தியே
இது சத்திய வாக்கு என்று அன்று
மாமுனி நாரதன் கள்ளனாய் கானில்
திரிந்த வால்மீகிக்கு ஓதிடவே அதை
ஏற்ற வால்மீகி ராமநாமமே கதி
என்று பெருந்தவம் புரிந்து மாமுனியானான்
புண்ணிய காவியமாம் ராமாயணம் படைத்தான்
இன்றும் ராம நாம விண்ணில் ஒலித்திடவே

அதனால் ராம நாமம் ஓதிடுவோம் நாளெல்லாம்
பிறவா வரம் சேர்க்கும் மாமருந்தாம்
அது ஞானியர் வாக்கு இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Jan-23, 5:16 pm)
Tanglish : rama naamam
பார்வை : 19

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே