கண்ணுக்கழகான மயிலய்யா

🦃🦃"வண்ண மயிலே நீ ஆடு
            தோகை விரிச்சு நீ ஆடு
            மரகத மயிலே நீ ஆடு
            மரத்துல நின்னு நீ ஆடு
            காட்டுக்குயிலே நீ ஆடு
            நீ பாட்டு பாடி கொண்டாடு
            மயிலே மயிலே நீ ஆடு
            மழை வருதானு நீ பாரு
            காட்டுக்குள்ளே உன் நடனம்
            காட்டிக்கிட்டா நம்பிடனும்
            அத அரங்கேற்றமும் பண்ணிடணும்
            தன்னந்தனியா உன் மெய்ச்சிலிர்ப்பு
            கல்லுக்குள்ள வரும் பொன்சிரிப்பு
            கண்ணுக்கழகா மயிலய்யா
            கண்ணுக்கினியா சிலையய்யா
            கூட்டக்கிளியே அழகய்யா
            பாட்டு நடனம்னு ஆடய்யா
            உந்தன் ஆட்டத்த நான்
            என் வீட்டில் பார்க்கணும்
            புது ராகம் போட்டு
            நான் பாடிடணும்"🦃🦃

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 12:42 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 78

மேலே