மறந்தாச்சு மறந்தாச்சு

குருவி சுட்டான் குளத்தில்
வீடுகள் வந்தாச்சு
சில்லாங்குச்சி, கோலி மறந்து
பப்ஜியும் வந்தாச்சு
தொண்ணையில பாயாசம் திண்ணையில தூக்கம் மறந்தாச்சு பட்டன் போன சட்டையில
ஊக்கும் மறந்தாச்சு
பதினொன்னா சளி வடியும்
மூக்கும் மறந்தாச்சு
நீத்தண்ணி, வெங்காயம் கடிச்சிக்க
மிளகாயும்
வறுத்தரிசி, கடுங்காப்பி எல்லாமே மறந்தாச்சு
முள்ளு குத்தும் காலுலதான்
எருக்கம்பால் அடிச்சு வந்த
சலமும் மறந்தாச்சு
கல்லுக் கெடங்கு பக்கத்தில கோலக்கல்லு அள்ளி வந்த
சொகமும் மறந்தாச்சு
எந்திரங்கள் பக்கத்தில எந்திரமா
வேல பாக்கும் நெலயும் வந்தாச்சு- ஆமா
சொந்த நாட்டில் அகதியபோல் அலையிற நெலம உண்டாச்சு

எழுதியவர் : திசை சங்கர் (31-Jan-23, 1:16 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 71

மேலே